தீவு விரைவுச்சாலை விபத்தில் சிக்கிய மாதுக்கு காயம்

தீவு விரைவுச்சாலை விபத்தில் சிக்கிய மாதுக்கு காயம்

1 mins read

துவாசை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையில், யூனோஸ் ரோடு வெளிச்சாலைக்கு அருகில் பணிகள் மேற்கொண்டிருந்த சமயத்தில் சாலையின் முதல் தடத்தில் நின்ற லாரியின் மீது கார் ஒன்று மோதியது. நேற்று அதிகாலை 1.20 மணிக்கு நிகழ்ந்த அந்த விபத்தில் காரை ஓட்டிய 44 வயது மாது காயமடைந்தார். சாலையில் நிறுத்தப்பட்டிருப்பதை எச்சரிக்கும் வகையில் லாரியின் எச்சரிக்கை விளக்குகள் எரியவிடப்பட்டிருந்தன.

இரண்டு லாரிகள் அங்கு நிற்கின்றன என்பதைக் குறிக்கும் வகையில் போக்குவரத்துக் கூம்புகள் லாரிக்குப் பின்புறம் வைக்கப்பட்டிருந்தன. இவ்வாறு இருந்தும் கார், லாரியின் பின்புறத்தில் மோதி, லாரிக்கு அடியில் மாட்டிக்கொண்டது. காரின் ஓட்டுநரான மாது சுயநினைவுடன் டான் டோக் செங் மருத்துவமனைக் குக் கொண்டு செல்லப்பட்டார். காருக்குள் இருந்த மேலும் இருவர் காயமின்றி தப்பினர். போலிஸ் விசாரணை தொடர்கிறது.