மூன்று சுகாதார மற்றும் அழகுப் பொருட்கள் குறித்து எச்சரிக்கை

மூன்று சுகாதார மற்றும் அழகுப் பொருட்கள் குறித்து எச்சரிக்கை

1 mins read
231a34ec-7535-4c87-9b14-d96faae866f5
-

இரண்டு அழகுப் பொருட்கள் மற்றும் ஒரு வலி நிவாரணி மருந்து தொடர்பில் சுகாதார அறிவியல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 'ஹெர்பா சரஃப்', 'வண்டர்குளோ வைட்டனிங் கிரிம்', 'டட்டி ஸ்கின் கேர்' அழகுப் பொருள் ஆகியவற்றில் சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் பொருட்கள் அடங்கியுள்ளன என்று ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது. மலேசியாவில் உள்ள உறவினர் மூலம் பெற்ற 'ஹெர்பா சரஃப்' மாத்திரைகளை ஒரு மாதத்துக்கு மேல் உட்கொண்ட 40 வயதுகளில் உள்ள மாது ஒருவர் மோசமான சர்க்கரை கட்டுப்பாட்டால் அவதியுற்றார். மற்ற இரு அழகுப் பொருட் களில் அளவுக்கு மீறி பாதரசம் இருப்பதாகக் கண்டறியப் பட்டது. இதுபோன்ற சட்டத்துக்குப் புறம்பான சுகாதாரப் பொருட் களை விற்பதோ விநியோகம் செய்வதோ குற்றமாகக் கருதப் படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு $100,000 வரை அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.