போலிசுக்கு சிறப்பு அதிகாரம்; விளக்கம் கேட்கும் குடிமை சமூக அமைப்புகள்

போலிசுக்கு சிறப்பு அதிகாரம்; விளக்கம் கேட்கும் குடிமை சமூக அமைப்புகள்

1 mins read

பயங்கரவாத சம்பவத்தின்போது போலிசாருக்கு சிறப்பு அதிகாரம் அளிப்பதற்கு வகை செய்யும் புதிய மசோதா குறித்து சில குடிமை சமூக அமைப்புகள் கேள்வி எழுப் பியுள்ளன. உத்தேச மசோதாவில் 'மோசமான சம்பவம்' என்று குறிப் பிடுவதைப் பற்றி விளக்கமளிக்க வேண்டும் என்று ஆறு குடிமை சமூக அமைப்புகளும் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன. மேலும் அமைதியான ஆர்ப் பாட்டங்கள் புதிய மசோதாவின் கீழ் கொண்டு வரக்கூடாது என்று அவை கேட்டுக் கொண்டுள் ளன. கடந்த மாதம் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் புதிய மசோதா அறிமுகப்படுத்தப்பட் டது.

பயங்கரவாதச் செயல்களை வலுவாக எதிர்கொள்வதற்கு ஏது வாக இந்த மசோதாவை உள் துறை அமைச்சு தயாரித்துள்ளது. இந்த நிலையில் பாலியல் தொழில் ஊழியர் நல அமைப்பான 'அவேர்' மற்றும் 'ஃபங்ஷன்8', 'புரோஜக்ட் எக்ஸ்', மனித உரிமை குழுவான 'திங்க் செண்டர்', வெளிநாட்டு ஊழியர்களுக்காகக் குரல் கொடுக்கும் 'ஹோம்', 'டிபிள்யூ2' ஆகிய ஆறு குடிமை சமூக அமைப்புகளும் புதிய மசோதாவை பற்றி மேலும் விவரம் அறிய முற்பட்டுள்ளன.