சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தில் விரிவுரையாற்ற ஹாங் காங்கைத் தளமாகக் கொண்ட ஊடகப் பேராசிரியர் ஒருவருக்கு கவனக்குறைவால் அனுமதி வழங் கப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள் ளது என்று என்யுஎஸ் தெரிவித் தது. விரிவுரையாற்ற வேண்டிய நாளன்றுதான் பேராசிரியரான செரியன் ஜார்ஜுக்கு அனுமதி வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. "கவனக்குறைவால் நிர்வாக நடைமுறைகள் எதிர்பார்க்கப் பட்டதைவிட அதிக காலத்தை எடுத்துள்ளன. "துரதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதற்காக வருந்துகிறோம்," என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக பேச்சாளர் ஒருவர் கூறினார். இந்த விவகாரம் தொடர்பில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் அளித் தார்.
பல்கலைக்கழக ஊழியர்கள், மாணவர்களுக்கான மார்ச் 28ஆம் தேதி விரிவுரை நிகழ்ச்சியில் பங் கேற்க டாக்டர் ஜார்ஜுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதனை அவர் ஏற்றுக் கொண்டதாக பல்கலைக் கழகம் குறிப்பிட்டது. இதற்கிடையே மார்ச் 9ஆம் தேதி வலைப் பதிவில் வெளியிட்ட தகவலில் சிங்கப்பூரரும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத் தின் முன்னாள் விரிவுரையாளரு மான டாக்டர் ஜார்ஜ், தேசிய பல் கலைக்கழகத்தின் தொடர்பு, புதிய ஊடகத் துறையின் தலைவரான பேராசிரியர் மோஹன் தத்தாவின் அழைப்பை கடந்த டிசம்பர் மாதம் ஏற்றுக்கொண்டதாக தெரிவித் திருந்தார்.

