$107,000 ஊழல்; 55 குற்றச்சாட்டுகள்

$107,000 ஊழல்; 55 குற்றச்சாட்டுகள்

fallback-0

15 Mar 2018 - 9:26 am

1 mins read

அங் மோ கியோ நகர மன்றத்தின் முன்னாள் பொது நிர்வாகி ஒருவர், ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளார். முன்னாள் பொது நிர்வாகியும் செயலாளருமான விக்டர் வோங் என்று அழைக்கப்படும் 58 வயது வோங் சீ மெங் மீது நேற்று 55 ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டன. இரு கட்டுமான நிறுவனங்களிட மிருந்தும் அதன் இயக்குநரிட மிருந்தும் அவர் லஞ்சம் பெற்ற தாகவும் லஞ்சப் பணத்தில் ஒரு பகுதியை சீனாவில் உள்ள காத லிக்கு அவர் அனுப்பி வைத்ததாக வும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் தெரிவிக்கின்றன.

கட்டுமான நிறுவனங்களான 19-ஏஎன்சி எண்டர்பிரைஸ், 19-என்எஸ்2 எண்டர்பிரைஸ் ஆகியவற்றின் இயக்குநரிடமிருந்து பணமாகவும் பொருளாகவும் அவர் லஞ்சம் பெற்றுள்ளார் என்றும் நீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு 107,000 வெள்ளி. நகர மன்றத்தின் ஒப்பந்தக் குத்தகைகளை வழங்குவதற்காக அவர் கட்டுமான நிறுவனங்களிட மிருந்து லஞ்சம் பெற்றார் என்று கூறப்பட்டது. சீனாவில் உள்ள காதலிக்கு பணம் அனுப்பி வைத்தது, மரு மகளுக்கு வேலை வாய்ப்பு பெற் றது, கார் வாங்குவதற்கு $13,500 கழிவு பெற்றது உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை திரு வோங் எதிர்நோக்குகிறார்.