ஆர்க்கிட்தோட்டங்கள்: 20 ஹெக்டருக்கு மேற்பட்ட நிலம் ஒதுக்கீடு

ஆர்க்கிட்தோட்டங்கள்: 20 ஹெக்டருக்கு மேற்பட்ட நிலம் ஒதுக்கீடு

1 mins read

சிங்கப்பூரில் ஆர்க்கிட் மலர்களை வளர்க்கும் தோட்டங்களுக்காக 20 ஹெக்டருக்கு மேற்பட்ட நிலம் ஒதுக்கப் பட்டுள்ளது என்று தேசிய பூங்காக் கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கை யில் தெரிவித்துள்ளது. இந்த அளவுக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது நாட்டின் தேசிய மலருக்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கி யத்துவத்தைப் பிரதிபலிக்கிறது.

இந்த ஒதுக்கீட்டு நிலங்கள் லிம் சூ காங், சுங்கை தெங்கா பகுதிகளில் அமைந்துள்ளன. இந்த நிலப்பகுதிக ளின் ஏலக்குத்தகை வரும் ஜூன் மாதத்தில் இடம்பெறும். "ஆர்க்கிட் தோட்டங்கள் அருகருகே அமைக்கப்படும் என்பதால் அவற்றின் நடத்துநர்கள் வளங்களைப் பகிர்ந்து, பெருக்கிக் கொள்ளலாம்.