சிங்கப்பூரின் இவ்வாண்டு பொருளியல் வளர்ச்சி 3.2 விழுக்காடாக இருக்கும் என்று தனியார் பொருளியல் நிபுணர்கள் முன்னுரைத்திருக் கின்றனர். முன்னதாக கடந்த டிசம் பரில் அவர்கள் பொருளியல் வளர்ச்சி 3.0% என்று கூறி னர். இப்போது தொடர்ந்து இரண்டாம் முறையாக தங்கள் முன்னுரைப்பை உயர்த்தி உள் ளனர்.
அதே வேளையில் 2019ல் நாட்டின் பொருளியல் வளர்ச்சி விகிதம் 2.8 விழுக் காடாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்ததாக சிங்கப்பூர் நாணய ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கை யில் தெரிவித்தது. கடந்த பிப்ரவரி மாதத்தில் 24 பொருளியலாளர்கள், பொருளியல் பகுப்பாய்வாளர் கள் ஆகியோரிடம் நடத்தப் பட்ட ஆய்வின் முடிவில் இந்த முன்னுரைப்பு வெளிப் பட்டுள்ளது.

