ஆசியான்-ஆஸ்திரேலியா கூட்டங்களில் பங்கேற்க சிட்னிக்கு பிரதமர் லீ பயணம்

ஆசியான்-ஆஸ்திரேலியா கூட்டங்களில் பங்கேற்க சிட்னிக்கு பிரதமர் லீ பயணம்

1 mins read

ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல்லின் அழைப்பை ஏற்று பிரதமர் லீ சியன் லூங் இன்று முதல் நான்கு நாள் அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டு சிட்னி நக ருக்குச் செல்கிறார். அங்கு பிரதமர் லீ, 3வது சிங்கப்பூர்-ஆஸ்திரேலியத் தலை வர்கள் உச்சநிலைக் கூட்டத்திலும் ஆசியான்- ஆஸ்திரேலியா சிறப்பு உச்சநிலைக் கூட்டத்திலும் பங் கேற்பார். சிங்கப்பூர்-ஆஸ்திரே லியத் தலைவர்களின் வருடாந்திர உச்சநிலைக் கூட்டம் 2015ல் தொடங்கியது.

இரு உச்சநிலைக் கூட்டங்களி லும் பங்கேற்கும் தலைவர்கள் வட் டார பாதுகாப்பு, அறிவியல் மற்றும் புத்தாக்கம், வட்டார முழுமையான பொருளியல் பங்காளித்துவ உடன்பாடு போன்ற பொதுவான விவகாரங்களை விவாதிப்பார்கள். அதைத் தவிர திரு லீ, சிட்னி பெருநகர் ஆணையத் தலைமை ஆணையாளர் லூசி டர்ன்புல்லை யும் நியூ சவுத் வேல்ஸ் பிரதமர் கிளேடிஸ் பெரஜிக்லியேனையும் சந்தித்துப் பேசுவார். சிட்னியில் வாழும் சிங்கப்பூரர்க ளையும் பிரதமர் லீ ஒரு விருந்து நிகழ்ச்சியில் சந்திப்பார். ஆசியான் அமைப்பின் தலை வர் என்ற முறையில் திரு லீ, திரு டர்ன்புல்லுடன் சேர்ந்து ஆசி யான்-ஆஸ்திரேலியா சிறப்பு உச்ச நிலைக் கூட்டத்துக்குத் தலைமை தாங்குவார்.