ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் தடை உத்தரவை மீறி வடகொரியாவுக்குப் பொருட்களை அனுப்பியதாகக் கூறப்படும் இரு சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு எதிரான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த நிறுவனங்கள் வடகொரியாவுக்கு ஆடம்பர பொருட் களை கடந்த ஆண்டு ஜூலை மாதம் வரை அனுப்பியதாக இணையத்தில் கசிந்துள்ள ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன் தொடர்பில் ஐக்கிய நாட்டு நிபுணர்கள் குழுவின் விசாரணையில் சிங்கப்பூர் தனது முழு ஒத்துழைப்பைக் கொடுக்கும் என்றும் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
"ஐக்கிய நாட்டு பாதுகாப்பு மன்றத்தின் தீர்மானங்களை சிங் கப்பூர் தீவிரமாகப் பின்பற்றுவ துடன் அதை முழுமையாக நடை முறைப்படுத்தும். விரிவான தேசிய அளவிலான செயலாக்க அறிக் கையை காலம் தவறாமல் ஐக்கிய நாட்டு பாதுகாப்பு மன்றத்திடம் சமர்ப்பிக்கும் சில நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று," என்று அமைச்சின் பேச்சாளர் சொன்னார். இந்த அறிக்கைகள் உறுப்பு நாடுகள் ஐக்கிய நாட்டுத் தீர்மா னங்களை எந்த அளவுக்கு நடை முறைப்படுத்தியுள்ளன என்பதை விளக்கிக்கூறும்.

