தகுந்த ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதிலும் அவர்களுக்கு மறுபயிற்சி அளிக்கவும் சிங்கப்பூர் வங்கிகள் சங்கத்தின் கீழ் இயங் கும் சுமார் 160 வங்கிகள் தங்கள் கடப்பாட்டைத் தெரிவித்துள்ளன. அவ்வாறு செய்வதால், தொழில் நுட்ப இடையூறுகளால் பாதிக்கப் பட்டுள்ள வங்கித் தொழில் துறையின் ஊழியர்கள் புதிய வேலைகளுக்கு மாறிக்கொள்ள முடியும் என்று கூறப்பட்டுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட வங்கி களுக்கான ஆகக் கடைசி மனித வள ஆலோசனைக் குறிப்பில், வங்கிகள் தங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை பொறுப்புள்ள வகையில் மேற்கொள்ள வேண் டும்.
பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு உதவும் வகையில் அது முத்தரப்புப் பங்காளிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நிதித்துறைக்கு ஒரு வலு வான, சிங்கப்பூரின் மைய திறனா ளிகளை உருவாக்குவதே இந்தக் கடப்பாட்டின் நோக்கம்.

