தைப்பூசத்தில் போலிசாருடன் மோதல்: மூவருக்கு சிறை, அபராதம்

தைப்பூசத்தில் போலிசாருடன் மோதல்: மூவருக்கு சிறை, அபராதம்

1 mins read
c3849ca8-c0d6-4fc8-8f69-30a1f727c933
-

தைப்பூச ஊர்வலத்தின்போது போலிசாருடன் மோதலில் ஈடுபட்ட ஒருவருக்கு 53 வார சிறைத் தண்டனை, $8,000 அபராதமும் வேறு இருவருக்கு அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு நடைபெற்ற தைப்பூச ஊர்வலத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தின் தொடர்பில் 35 வயது ராமச்சந்திரா சந்திரமோகனுக்கு சிறைத் தண் டனை விதிக்கப்பட்டது. அபராதம் கட்டவியலாது என்று அவர் கூறியதால் கூடுதலாக 3 வாரம் ஐந்து நாட்கள் சிறையில் இருப்பார். 36 வயது பாதுகாப்பு அதிகாரி யான குணசேகரனுக்கு $8,000 அபராதமும் 31 வயதான செயல் முறை நிர்வாகி ஜெயகுமார் கிருஷ்ணசாமிக்கு $8,500 அப ராதமும் நேற்று விதிக்கப்பட்டது. குணசேகரனின் அண்ணன் 2015ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழாவில் காவடி எடுத்ததால் அவரும் ராமச்சந்திராவும் இந்திய இசைக்குழு ஒன்றை தங்களுடன் அழைத்துச் சென்றனர். காவடி ஊர்வலத்தில் அவர்களுடன் ஜெயகுமாரும் சேர்ந்துகொண்டார்.

தைப்பூச ஊர்வலத்தில் இசைக் கருவிகளை வாசிப்பதற்கு அப் போது தடை இருந்ததால் இவர் களது குழு இசைப்பதற்கு போலிசார் தடைவிதித்தனர். இத னால் கோபமடைந்த ராமச்சந்திரா வும் குணசேகரனும் போலிசாரைப் பார்த்து சத்தமிட்டனர். போலிஸ் அதிகாரியான ஸ்டாஃப் சார்ஜண்ட் டென்னிஸ் லீ ஐக் செங், குண சேகரனை கைதுசெய்தபோது ராமச்சந்திரா அந்த அதிகாரியின் கீழ்த் தாடையில் குத்தியதாகவும் மூத்த ஸ்டாஃப் சார்ஜண்ட் அஸ்லி ஓத்மானை ராமச்சந்திரா சாடிய தாகவும் கூறப்பட்டது.

(இடமிருந்து) ராமச்சந்திரா சந்திரமோகன், குணசேகரன், ஜெயகுமார். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்