சிங்கப்பூரில் இந்த ஆண்டு பிப்ரவரியில் புதிய தனியார் வீடுகள் விற்பனை 61.5% குறைந்தது. மொத்தம் 377 வீடுகள் கைமாறின. சீனப் புத்தாண்டு காலமே இதற்கான காரணம். சென்ற ஆண்டு பிப்ரவரியில் 979 வீடுகள் விற்கப்பட்டன. மாத அடிப்படையில் பார்க்கையில் இந்த ஆண்டு பிப்ரவரி விற்பனை, அதற்கு முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 28% குறைந்தது. ஜனவரி மாதம் 524 புதிய தனியார் வீடுகள் விற்கப்பட்டன. இருந்தாலும், வீடுகளைக் கட்டி விற்கும் நிறுவனங்கள் பிப்ரவரியில் விற்பனைக்குவிட்ட வீடுகளைவிட அதிக வீடுகளை விற்று இருக்கின்றன. 2018 பிப்ரவரியில் 186 புதிய வீடுகள் சந்தைக்கு வந்தன. இந்த அளவைப் போல இரண்டு மடங்கு வீடுகள் விற்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய தனியார் வீடு விற்பனை குறைவு
1 mins read
-

