பிரச்சினையைக் கிளப்பி உள்ள புத்தகம்: அமைச்சு விளக்கம்

பிரச்சினையைக் கிளப்பி உள்ள புத்தகம்: அமைச்சு விளக்கம்

1 mins read
fed6930c-f66f-4dd7-bb24-4311f2b669c9
-

உயர்நிலை மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான சமூகவியல் வழிகாட்டி புத்தகம் ஒன்று இணையத்தில் பிரச்சினையைக் கிளப்பி இருக்கிறது. இதனையடுத்து, அந்தப் புத்தகம் அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தக பட்டியலில் இல்லை என்று கல்வி அமைச்சு தெரிவித்தது. தொடர்ந்து அந்தப் புத்தகங்கள், பிரபலமான புத்தகக் கடைகளில் இருந்து அகற்றப்பட்டுவிட்டன. 'ஜிசிஇ 'ஓ' நிலை சமூகவியல் பாடத்திற்கான முழுமையான வழிகாட்டி ஏடு தொகுப்பு 1' என்ற அந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு பகுதி, பல்வேறு சமூக பொருளியல் பின்னணியைக் கொண்ட மக்களைப் பற்றிய பரந்த அளவிலான பொதுப்படையான கருத்துகளைத் தெரிவிக்கிறது. இது பாதகமானதாக இருக்கிறது என்று பொதுமக்கள் கருதுகிறார்கள். கீழ்மட்ட பொருளியல் நிலையில் இருப்பவர்கள் சிங்லிஷ் அல்லது பல கிளைமொழிகளைப் பேசுகிறார்கள் என்றும் மேல்மட்டத்தினர் முறையான ஆங்கிலத்தைப் பேசுகிறார்கள் என்றும் அப்புத்தகத்தில் ஒரு கருத்து இடம்பெற்றுள்ளது.