பொய் தகவல்களைப் பரப்பி சமூகத்தைக் கீழறுக்க முடியும்

பொய் தகவல்களைப் பரப்பி சமூகத்தைக் கீழறுக்க முடியும்

2 mins read
c0746ddd-8bbb-4364-bd42-88a2e7fb5443
-

அந்நிய சக்திகள், தங்களுடைய கீழறுப்பு வேலைகளுக்கான ஒரு சோதனைத்தளமாக சிங்கப்பூரை ஆக்கிக்கொள்ள முடியும் என்றும் சமூகத்தைச் சிதைத்துவிடும் வகையில் பொய்யான தகவல் களை அவை பயன்படுத்த முடி யும் என்றும் பாதுகாப்புத் துறை வல்லுநர் ஒருவர் எச்சரித்து இருக்கிறார். சமூகங்களைக் கீழறுத்து விடும் எண்ணத்துடன் கூடிய பேர்வழிகளுக்கு, பல சமயங் களைக் கொண்டுள்ள, விவேக நகராக ஆகவேண்டும் என்ற இலக்கைக் கொண்டுள்ள சிங்கப்பூர் போன்ற நாடுகள் குறியாக இருக்கமுடியும் என்று எஸ் ராஜரத்தினம் அனைத் துலக ஆய்வுப் பள்ளியைச் சேர்ந்த டாக்டர் ஷ‌ஷி ஜெயகுமார் நேற்று தெரிவித்தார். இணையத்தில் பொய் பிரசாரங்களை வேண்டுமென்றே பரப்புவது பற்றிய தெரிவுக் குழு வின் பொது விசாரிப்பு நேற்று இரண்டாவது நாளாகக் கூடியது.

கணினி வழி நடக்கும் பொய் பிரசாரத்தை சிங்கப்பூர் எப்படி முறியடிக்கவேண்டும் என்பது பற்றி விவாதிக்கும் அந்த பொது விசாரிப்பு எட்டு நாட்களுக்கு நடைபெறும். கல்வித் துறையினர், சட்டத் துறையினர், சமயக் குழுவினர் பலரும் அதில் தங்கள் கருத்துகளை தெரிவுக் குழு வின் முன்னிலையில் தெரியப் படுத்தி வருகிறார்கள்.

எஸ் ராஜரத்தினம் அனைத் துலக ஆய்வுப் பள்ளியில் உள்ள உன்னத தேசிய பாதுகாப்பு நிலை யத்திற்குத் தலைமை வகிக்கும் டாக்டர் ஷ‌ஷி, உலகம் முழுவதும் உள்ள பேர்வழிகள், பொய் பிர சாரங்களைப் பயன்படுத்தி எப்படி எப்படியெல்லாம் மற்ற நாடுகளைத் தாக்கமுடியும் என்பதை தெரிவுக் குழுவிடம் எழுத்து மூலமாகத் தாக்கல் செய்த அறிக்கையில் கோடிகாட்டினார். கணினியில் பயன்படக்கூடிய ஒரு சுட்டுப்பெயரைப் பயன் படுத்தி கீழறுப்பு வேலைகளுக் கான ஒரு சோதனைத்தளமாக சிங்கப்பூரை எதிரிகள் பயன் படுத்தமுடியும் என்றார் அவர்.

டாக்டர் ஷ‌ஷி ஜெயகுமார்