யீஷூன் இன்டஸ்ட்ரியல் ஸ்திரீட் 1ல் உள்ள ஓர் ஆலயத்தின் படிக்கட்டுகளை வெளி யேறும் வழி என நினைத்து கம்ஃபர்ட் டெல்குரோ டாக்சி ஓட்டுநர் ஒருவர் அதில் வாகனத்தை இறக்கிவிட்டார். அந்த டாக்சி ஓட்டுநர் அங்கு ஒரு பயணியை அப்போதுதான் தன் வாகனத்தில் இருந்து கீழே இறக்கிவிட்டிருந்தார். அதையடுத்து, அங்கிருந்து புறப்பட்டுச் செல்ல முயன்ற டாக்சி ஓட்டுநர், ஆலயத் தின் படிக்கட்டுகளை வெளியேறும் வழி யாக நினைத்து தமது வாகனத்தை அதில் இறக்கிவிட்டார் என்று கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனத்தின் தகவல் தொடர்பு அதிகாரி திருவாட்டி டாமி டான் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தில் டாக்சி ஓட்டுநர் உட்பட யாருக்கும் காயமில்லை. டாக்சி ஓட்டுநர் சுதாரிப்பதற்குள் வாகனம் படிக் கட்டுகளில் இறங்கிவிட்டது என்றார் அவர். டாக்சி ஓட்டுநர்களின் நல்வாழ்வே தங்களின் முன்னுரிமை என்று குறிப்பிட்ட அந்த அதிகாரி, ஆலயத்தின் சொத்துக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறதா என்பதைத் தாங்கள் ஆராய்ந்து வருவதா கவும் கூறினார். டாக்சி படிக்கட்டில் இறங்கி தரையில் முட்டி நிற்பதைக் காட்டும் காணொளி வியாழக்கிழமை இரவு ஃபேஸ்புக்கில் பதி வேற்றம் செய்யப்பட்டது. அதை ஒரே நாளில் 1,400 முறைக்கு மேல் பலரும் பகிர்ந்தனர்.
ஆலயத்தில் பயணியை இறக்கி விட்டதும் வழியென தவறாக நினைத்து படிக்கட்டுகளில் டாக்சியை இறக்கி விட்டார் அதன் ஓட்டுநர். ஃபேஸ்புக் காணொளிப் படம்

