மின்ஸ்கூட்டர் ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

மின்ஸ்கூட்டர் ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

1 mins read
fd4ee48b-f818-4bfb-a6c7-fefdd9ae8f41
-

பிடோக் ரெசர்வாயர் ரோட்டில் மின்ஸ்கூட்டரில் சென்று 45 வயது மாது ஒருவர் மீது மோதிவிட்டதாகக் கூறப்படும் முகம்மது ஷைய்ஃப் ஜுமாடி, 23, என்பவர் மீது நேற்று மூர்க்கமாக நடந்துகொண்டு அதன் மூலம் காயத்தை விளைவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. பிடோக் ரெசர்வாயர் ரோட்டில் உள்ள 151வது புளோக்குக்கு எதிரே, மார்ச் 7ஆம் தேதி மாலை 6.10 மணிக்கு, அந்த ஆடவர் மின்ஸ்கூட்டரில் சென்றார். அப்போது அவர் திருவாட்டி கோ லே யோங் என்ற மாது மீது மோதிவிட்டது. இதனால் அந்த மாதுக்குத் தலையில் கடுமையான காயங்கள் ஏற்பட்டது. விபத்து நிகழ்ந்ததும் மருத்துவ வண்டியைக் கூப்பிட்டுவிட்டு ஜுமாடி அந்த இடத்தைவிட்டு ஓடிவிட்டார் என்று கூறப்படுகிறது. பிடோக் போலிஸ் பிரிவு அதிகாரிகள் புதன்கிழமை பிடோக் நார்த் ஸ்திரீட் 3ல் ஜுமாடியை கைதுசெய்தனர். குற்றவாளி என்று தீர்ப்பானால் அவருக்கு நான்காண்டு வரை சிறை மற்றும் $10,000 வரை அபராதம் விதிக்க முடியும்.