'புளுஎஸ்ஜி' மின்சார கார்களுக்கு கிராக்கி

'புளுஎஸ்ஜி' மின்சார கார்களுக்கு கிராக்கி

1 mins read
baed68e2-dac9-4d7f-8b62-0c12a7c11fb3
-

புளுஎஸ்ஜி எனப்படும் மின்சார வாடகை கார்கள், முதல் மூன்று மாதங்களில் 20,000 தடவைக்கும் அதிகமாக வாடகைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இருக்கின்றன. அந்தச் சேவையைப் பயன் படுத்த 9,000 பேருக்கும் அதிக மக்கள் விரும்பி கையெழுத்திட்டு இருக்கிறார்கள் என்றும் இது இரண்டு மாதங்களுக்கு முன் நில விய எண்ணிக்கையைவிட அதி கம் என்றும் புளுஎஸ்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் இந்த நிறுவனத் தின் சேவை சென்ற ஆண்டு டிசம்பரில் 80 வாகனங்களுடன் தொடங்கப்பட்டது. அந்த வாகனங் களுக்கு மின்சக்தியை ஏற்றிக் கொள்வதற்கு 32 நிலையங்கள் அமைக்கப்பட்டன. இப்போது அந்தச் சேவையை 105 வாகனங்கள் வழங்குகின்றன. அவற்றுக்காக 45 மின்சக்தி நிலை யங்கள் செயல்படுகின்றன. புளுஎஸ்ஜி சேவை கவர்ச்சி கரமானதாக இருக்கிறது என்றும் இந்த வசதியை வாடிக்கையாளர் கள் விரும்புகிறார்கள் என்பதும் இந்தப் புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வந்திருப்பதாக புளுஎஸ்ஜி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பிராங் விட்டி தெரிவித்துள்ளார்.

சையன்ஸ் பார்க் டிரைவில் 2017 செப்டம்பர் 27ஆம் தேதி புளுஎஸ்ஜி மின்சக்தி காரை ஒருவர் ஓட்டிச் சென்றார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்