எக்ஸ்போவில் சிறார், பெற்றோருக்கான கற்றல் நிகழ்ச்சி

எக்ஸ்போவில் சிறார், பெற்றோருக்கான கற்றல் நிகழ்ச்சி

1 mins read
2e402be5-9001-47b8-b0e1-55bcca15cee2
-

இந்த வட்டாரத்தின் ஆகப் பெரிய கல்வித்துறை நிகழ்ச்சி யான 'ஸ்மார்ட்கிட்ஸ் ஆசியா 2018' என்ற கற்றல் கண்காட்சி சிங்கப்பூர் எக்ஸ்போ அரங்கு 6ல் நேற்று தொடங்கியது. நாளை வரை நடக்கும் அந்த நிகழ்ச்சி பெற்றோர், பிள்ளைகள், பராமரிப்புச் சேவை வழங்குவோர், கல்வித் துறையாளர்கள் எல்லா ருக்கும் இலவசமாக கிடைக்கும் வாய்ப்பாக இருக்கிறது.

இரண்டு முதல் 12 வரை வய துள்ள பிள்ளைகளுக்கு கல்வி அறிவைப் போதிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் எவரும் இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான பலன்களைப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 'ஸ்மார்ட்கிட்ஸ் ஆசியா' நிகழ்ச்சியில் கேளிக்கைகள், நேரடிப் பயிற்சி வாய்ப்புகள், கலந்துறவாடல்கள் பலவும் இடம்பெறுகின்றன. கல்வி அமைச்சின் 21வது நூற்றாண்டுக்கான போட்டித் திறன் மற்றும் மாணவர் செயல் திறனுக்கான திட்டத்தையொட்டி சிறார்களிடையே ஆற்றலை மேம் படுத்த உதவும் கண்காட்சி யாளர்கள், இந்தத் துறையைச் சேர்ந்தவர்கள், பலரையும் இந்த நிகழ்ச்சி ஒருசேர கொணர்கிறது.

கல்வி மற்றும் பொழுதுபோக்கு செயல்திட்டங்களைக் கொண்டு நேரடி கற்றல் அனுபவத்தை ஏற்படுத்தித் தந்து 'ஸ்மார்ட்கிட்ஸ் ஆசியா' நிகழ்ச்சி சிறார்களுக்குப் பெரிதும் உதவுகிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்