தாய்மொழிகள், கிளைமொழிகள் மூலம் பொய் பிரசாரம் பரவக் கூடும். அத்தகைய பிரசாரங்களி னால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை அலட்சியப்படுத்திவிடக்கூடாது என்று சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் இணை பேராசரியர் முகம்மது எல்மி நெக்மட் எச்சரித்துள்ளார். இணையத்தில் பொய் பிரசாரம் வேண்டுமென்றே பரப்பப்படும் ஆபத்துகளைத் தவிர்க்க உதவும் பரிந்துரைகளை உருவாக்குவதற் கான 10 பேரைக் கொண்ட ஒரு தெரிவுக் குழுவின் பொது விசாரிப்பில் இணை பேராசிரியர் நேற்று தன் கருத்துகளை முன்வைத்தார். பொய்யான தகவல்கள் பற்றிய பல விவாதிப்புகளும் ஆங்கில மொழியிலேயே நடப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
இருந்தாலும் முதிய சிங்கப்பூரர் கள் போன்ற சமூகத்தின் சில பிரிவினருக்குத் தங்கள் தாய் மொழிகளில் பேசிப் புழங்குவதே வசதியாக இருக்கும் என்பதால் வாட்ஸ்=அப் குழு போன்ற பிரத்தியேகத் தளங்களின் மூலம் அத்தகைய தாய்மொழிகளில் பொய் பிரசாரம் கிடுகிடுவென பரவக்கூடும் என்று அவர் எச்ச ரித்தார். வெவ்வேறான பல மொழி கள் மூலமாக பரப்பப்படும் பொய் பிரசாரத்தின் தாக்கத்தைப் பரி சோதிக்க அதிகம் முயற்சிகள் இடம்பெறவேண்டியது இதனால் அவசியமாகிறது என்றார் அவர். மலேசியா, இந்தோனீசியா போன்ற பக்கத்து நாடுகளிலிருந்து கிளம்பக்கூடிய தகவல்களும் சிங்கப்பூரை பாதிக்கக்கூடும் என்று பேராசிரியர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் இணை பேராசிரியர் முகம்மது எல்மி நெக்மட், தவறான தகவல்கள் பற்றிய பல விவாதிப்புகளும் ஆங்கிலத்திலேயே நடப்பதைச் சுட்டிக்காட்டினார். படம்: GOV.SG

