லாரன்ஸ் வோங்கும் ஜனில் புதுச்சேரியும் தொழிற்சங்கத் தலைவர்களின் ஆலோசகர்கள்

லாரன்ஸ் வோங்கும் ஜனில் புதுச்சேரியும் தொழிற்சங்கத் தலைவர்களின் ஆலோசகர்கள்

1 mins read
05100a64-fed4-45b8-839d-f30ee4d5c26b
-

சிங்கப்பூரின் தொழிற்சங்க இயக் கத்தில் இரண்டு அமைச்சர்கள் முக்கிய பங்காற்றவிருக்கின்றனர். தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங்கும் கல்வி; தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச் சேரியும் தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் தொழிற்சங்கக் குழு வுக்கு ஆலோசகர்களாக நியமிக் கப்பட்டுள்ளனர். 2015ல் அமைக்கப்பட்ட 'யூஏஎல்சி' எனும் 'யூ இணைத் தலைவர்களின் வட்டம்' என்று அழைக்கப்படும் குழுவுக்கு அவர்கள் ஆலோசகர் களாக செயல்படுவர். இதில் தேசிய தொழிற்சங்க இயக்கத்தில் அங்கம் வகிக்கும் பல்வேறு தொழிற்சங்கங்களின் தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர். 2011ல் தொடங்கப்பட்ட அந்த கட்டமைப்பில் 67 சங்கங்களும் பல தொழிற்துறையைச் சேர்ந்த 250,000க்கும் மேற்பட்ட உறுப்பினர் களைப் பிரதிநிதிக்கும் தலைவர் களும் அடங்கியுள்ளனர்.

லாரன்ஸ் வோங்கும் ஜனில் புதுச்சேரியும் (வலம்) தொழிற்சங்க இயக்கத்தின் ஆலோசகர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்