எஸ்எம்ஆர்டி செயலி மூலம் கூட்ட நெரிசலை அறியலாம்

எஸ்எம்ஆர்டி செயலி மூலம் கூட்ட நெரிசலை அறியலாம்

1 mins read
cabf4a4d-925d-4744-b40d-f2696afd2623
-

ரயில் பயணிகள் வீட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்பாகவே ரயில் நிலையங்களில் உள்ள கூட்ட நெரிசலை அறியலாம். எஸ்எம்ஆர்டியின் கைபேசி செயலியில் புகுத்தப்படும் புதிய சிறப்பு அம்சங்களில் இதுவும் ஒன்று. இவ்வாண்டின் பிற்பகுதியில் அனைத்து எஸ்எம்ஆர்டி நிலையங் களிலும் கூட்டத்தின் அளவை நிர்ணயிக்கக்கூடிய நவீன உணர் கருவிகள் செயல்படுத்தப்படவிருக் கின்றன. ரயில் நிலையங்களில் உள்ள கண்காணிப்புக் கேமராக்கள், பயணிகளின் கைபேசியிலிருந்து வெளிப்படும் கம்பியில்லா இணை யத் தொடர்பின் சமிக்ஞைகள் (வைஃபை) போன்ற பல்வேறு வழி களிலிருந்து கிடைக்கும் தகவல் களை அடிப்படையாகக் கொண்டு கூட்ட நெரிசல் கண்காணிக்கப் படும். இப்புதிய வசதியால் ரயிலுக்காக எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும் என்பதை பயணிகள் தெரிந்துகொள்ளலாம்.

பீஷான் எம்ஆர்டி நிலையத்தில் உச்சநேர கூட்டம். கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்