மலேசியா செல்லும் வாகனங்களுக்கு புதிய பதிவு அட்டை வழங்கப்படும்

மலேசியா செல்லும் வாகனங்களுக்கு புதிய பதிவு அட்டை வழங்கப்படும்

1 mins read

வெளிநாட்டில் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களுக்கான புதிய வாகன நுழைவு அனுமதி முறையை அறிமுகப்படுத்த இருக்கும் மலேசியா, அடுத்த மாத மத்தியிலிருந்து அதற்கான பதிவு அட்டைகளை வழங்கவிருக்கிறது. கட்டம் கட்டமாக உட்லண்ட்ஸ் கடற்பாலம், துவாஸ் இரண்டாம் இணைப்புகளில் அந்த அட்டை வழங்கப்படும். ஏற்கெனவே வசூலிக்கப்படும் 20 ரிங்கிட் சாலை வரிக்கும் மேலாக இனி 25 ரிங்கிட் ($8.25) வசூலிக்கப்படும் என்று மலேசிய போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.