லீடன் ரெசிடன்ஸ் வீடமைப்புக் கட்டடத்தில் தீ: 50 பேர் வெளியேற்றம்

லீடன் ரெசிடன்ஸ் வீடமைப்புக் கட்டடத்தில் தீ: 50 பேர் வெளியேற்றம்

1 mins read

ஃபேரர் சாலை அருகே அமைந்துள்ள 'லீடன் ரெசிடன்ஸ்' கொண்டோமினியம் கட்டடத்தில் நேற்று காலை சுமார் 10.30 மணிக்கு தீ மூண்டது. இரண்டாவது மாடியில் உள்ள வீட்டின் படுக்கை அறையில் அந்தச் சம்பவம் நடந்தது. அப்போது வீட்டில் எவரும் இல்லை என்றும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. அந்த வீடமைப்புக் கட்டடத்தில் இருந்த சுமார் 50 பேர் வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது.