சிங்கப்பூர் உலக தண்ணீர் தினத் தின் ஓர் அங்கமாக லிட்டில் இந் தியா வர்த்தகர்கள், மரபுடைமை சங்கம் (லிஷா) சாலைக் காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. பொதுப் பயனீட்டுக் கழகத்து டன் இணைந்து ஏற்பாடு செய்யப் பட்டிருந்த சாலைக் காட்சியில் சுமார் 350 வர்த்தகர்களும் பொது மக்களும் 'நானும் சேமிக்கிறேன்' என்று பற்றுறுதி எடுத்துக்கொண்டனர்.
நேற்றுக் காலை 10 மணி முதல் மாலை ஆறு மணி வரை யில் நடந்த காட்சியில் சமூக அமைப்புகளைச் சேர்ந்த சில சமூகத் தலைவர்களும் தண்ணீ ரைச் சேமிக்க உறுதிபூண்டனர். எளிதான தண்ணீர் சேமிப்பு முறைகளை அறிந்து அனைவரும் தண்ணீரை விரயமாக்காமல் இருக்க முயற்சி எடுக்கவேண்டும் என்று சமூகத்தினரை லிஷா கேட்டுக்கொள்கிறது. ஒவ்வொரு சொட்டுத் தண்ணீ ரும் முக்கியம் என்ற கருப்பொரு ளைக் கொண்டு இவ்வாண்டின் சிங்கப்பூர் உலக தண்ணீர் தினம் அனுசரிக்கப்படுகிறது. சாலைக் காட்சியில் வீட்டில் தண்ணீர் பயன்பாடு முந்தைய மாதத்தைவிட குறைந்திருந்தால் பயனீட்டு ரசீதை எடுத்துவந்து காட்டுபவர்களுக்கு பொதுப் பயனீட்டு கழகம் அன்பளிப்பை யும் வழங்கியது.

