திருமணமாகி ஐம்பது ஆண்டு களுக்கும் மேலான 170 தம்பதி யினர் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு ஏற்பாடு செய்திருந்த திருமண பொன்விழா கொண்டாட் டங்களில் கலந்துகொண்டனர். ஐம்பது ஆண்டுகளுக்கும் முன்னர் சிங்கப்பூரில் திருமணப் பதிவகம், முஸ்லிம் திருமணங்கள் பதிவகத்தில் தங்களின் திருமணத் தைப் பதிவுசெய்தோர் இஸ்தானா வில் நடந்த இந்தக் கொண்டாட் டங்களில் கலந்து கொண்டனர். மகளிர் சாசனத்தின்படி திரும ணத்தை நடத்துவதற்காக 1961ஆம் ஆண்டு திருமணப் பதிவகம் அமைக்கப்பட்டது.
பிறகு இஸ்லாமிய சட்டத்தின்படி திரு மணப் பதிவு செய்யப்படுவதற்காக 1968ஆம் ஆண்டில் முஸ்லிம் திருமணங்கள் பதிவகம் அமைக்கப்பட்டது. சென்ற ஆண்டு முதல் திரு மணமாகி 50 ஆண்டுகளை எட் டும் தம்பதியினருக்கு பொன்விழா திருமண நினைவுச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு தகுதிபெற தம்பதியினரில் ஒருவ ராவது சிங்கப்பூரராக இருக்க வேண்டும்; மேலும் சிங்கப்பூர் திருமணப் பதிவகத்தில் அவர்கள் அப்போது தங்கள் திருமணத்தை பதிவுசெய்திருக்க வேண்டும்.
பொன்விழா திருமண கொண்டாட்டங்களில் கலந்துகொண்ட 51 ஆண்டுகள் மணவாழ்வில் இணைந்திருக்கும் 75 வயது திரு தனபாலம் நாராயணசாமி, 72 வயது திருவாட்டி லூயிசா அந்தோனி. படம்: சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு

