தேசிய பூங்காக் கழகத்தின் புதிய இணைய வரைபடம்

தேசிய பூங்காக் கழகத்தின் புதிய இணைய வரைபடம்

1 mins read
20542d7f-dddc-4218-a988-201a117eda3f
-

சிங்கப்பூரின் நகர்ப்புற நிலவனப் பில் உள்ள 500,000க்கும் மேற்பட்ட மரங்கள் எங்கு உள்ளன என்பது குறித்த விவரங்களை இனி இணைய வரைபடம் மூலம் அறிந் துகொள்ளும் புதிய திட்டத்தை தேசிய பூங்காக் கழகம் நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு மரத்தையும் அவற்றின் புகைப்படங்களுடன் 'trees.sg' எனும் அந்தப் புதிய இணைய வரைபடம் மூலம் மக்கள் காணலாம்.

ஆசியாவிலேயே ஆக விரி வான மரங்களின் வரைபடமான இதைத் தயாரிக்க 10 மாதங்கள் பிடித்ததாகவும் இதற்கு $100,000 செலவானதாகவும் தேசிய பூங்காக் கழகம் தெரிவித்துள்ளது. வீடமைப்புப் பேட்டைகளில் உள்ள மரங்களின் அடையாளம், அடுத்த முறை எப்போது மரத்தின் கிளைகள் நறுக்கப்படும், சிங்கப்பூ ரின் 262 மரபுடைமை மரங்கள் எங்கு அமைந்துள்ளன என்பன வற்றை திறன்பேசி மூலம் தெரிந்து கொள்ள இந்தத் திட்டம் வழி செய்கிறது.