சிறுவர்களிடமும் பதின்ம வயது மாணவர் ஒருவரிடமும் பாலியல் செயல்களைப் புரிந்த குற்றங்களுக்காக காற்பந்துப் பயிற்றுவிப்பாளருக்கும் கயிறுத் தாண்டுதல் பயிற்றுவிப்பாளருக்கும் முறையே 26 ஆண்டு, 25 ஆண்டுச் சிறை தண்டனைகள் விதிக்கப்பட்டுள் ளன. காற்பந்துப் பயிற்றுவிப்பாள ரான 28 வயது பெர்னார்ட் டான் மெங் சூன் எட்டு வயது முதல் 11 வயது வரையிலான ஏழு பைய ன்களிடம் பாலியல் செயல் புரிந்த ஐந்து குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். அவருக்கு 26 ஆண்டு சிறை, 24 பிரம்படிகளும் தண்டனையாக விதிக்கப்பட்டன. அவர் மீதான இதர 20 குற்றச்சாட்டுகள் தண் டனை விதிப்பின்போது கவனத் தில் கொள்ளப்பட்டன என்று குறிப்பிட்ட நீதிபதி வெலரி தியென், பெர்னார்ட் குற்றங்களை ஒப்புக் கொண்டதால் பாதிக்கப் பட்ட சிறுவர்கள் நீதிமன்ற சாட்சியத்திலிருந்து காப்பாற்றப் பட்டுள்ளனர் என்றார்.
பெர்னார்ட் 2015ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி கைது செய்யப்பட்டு, அக்டோபர் 3ஆம் தேதியிலிருந்து விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மற்றொரு வழக்கில் கயிறு தாண்டுதல் பயிற்றுவிப்பாளரான 60 வயது ரோஜர் யு ஜூனியர் என்பவர் பலதுறை தொழிற்கல் லூரியில் பயின்ற தனது மாணவி ஒருவரிடம் பாலியல் செயல் புரிந் ததற்காக 25 ஆண்டுச் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ரோஜர் அந்தக் குற்றத்தை 2008க்கும் 2010க்கும் இடைப் பட்ட காலத்தில் புரிந்தார் என்றும் அப்போது அந்த மாணவிக்கு 13, 14 வயதிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ரோஜர் மீது ஏழு குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டன.
கயிறுத் தாண்டுதல் பயிற்றுவிப்பாளர் ரோஜர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

