சம்பள இணை நிதித் திட்டத்தின் கீழ் இம்மாத இறுதியில் பெரும் பாலான சிறிய, நடுத்தர நிறுவனங் களைச் சேர்ந்த முதலாளிகளுக்கு 800 மில்லியன் வெள்ளிக்கு மேல் அரசாங்கம் நிதியுதவி வழங்கு கிறது. மார்ச் 31ஆம் தேதி அன்று அந்த சம்பள இணை நிதி வழங்கப் படும் என்று நிதி அமைச்சும் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையமும் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தன. அதிகரித்துவரும் சம்பளச் செலவினங்களை சமாளிப்பதற்காக இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட தொகையில் 70 விழுக்காட்டை சிறிய, நடுத்தர நிறுவனங்கள் பெறும்.
சிங்கப்பூரர்களின் சம்பளத்தை நாலாயிரம் வெள்ளி வரை உயர்த்தி தங்களுடைய உற்பத்தி லாபத்தை பகிர்ந்துகொள்ளும் முதலாளி களுக்கு உதவ சம்பள இணை நிதி திட்டம் 2013ல் அறிமுகமானது. இவ்வாண்டின் வரவு செலவுத் திட்டத்தில் இது, மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது. இவ்வாண்டில் அரசாங்கத்தின் பங்கு 20 விழுக்காடாக இருக்கும். இது, அடுத்த ஆண்டில் 15 விழுக்காடாகவும் 2020ல் பத்து விழுக்காடாகவும் இருக்கும்.

