'தேவையற்ற மருத்துவ சோதனைகள் கூடாது'

1 mins read
9bcde47d-e859-4e28-8df0-f0816ee6dd20
-

சுகாதாரப் பராமரிப்பு செலவுகளைக் குறைவாக வைத்திருக்க மருத்து வர்கள் ஆற்ற வேண்டிய பங்கு குறித்து சிங்கப்பூர் மருத்துவ மன்றம் அவர்களுக்கு அனுப் பியுள்ள சுற்றறிக்கையில் நினைவூ ட்டியுள்ளது. சுகாதாரப் பராமரிப்பு காப்புறுதி களைப் பயன்படுத்தி விடுக்கப்படும் கோரிக்கைகளை கூர்ந்தாய்வு செய்ய வேண்டியுள்ள நிலையில் இந்த நினைவூட்டை மன்றம் அனுப்பியுள்ளது. "அதிக அளவிலான தொகை, கேள்விக்குரிய காப்புறுதி கோரிக் கைகள்," என்ற தலைப்பில் ஊட கத்தில் வெளியான செய்தியையும் தமது நினைவூட்டுக் கடிதத்தில் மன்றம் சுட்டிக்காட்டியிருந்தது. நோயாளிகளுக்கான கட்ட ணங்கள் காப்புறுதி நிறுவனங் களால் முழுமையாகவோ அல்லது பெரிய அளவிலோ ஈடுகட்டுவதாக இருந்தால் மருத்துவர்களின் கட் டணங்கள் குறித்து யாரும் கேள்வி எழுப்ப மாட்டார் என்று அது கூறியது.

மருத்துவர்களும் தங்களுடைய கட்டணங்களை வசூலிக்கும் நோக்கத்தில் தேவையில்லாத சோதனைகளுக்கும் நடைமுறை களுக்கும் நோயாளிகளை உட் படுத்தக்கூடாது என்று வலி யுறுத்திய மன்றம், அது நன் னடத்தை நெறிமுறைகளுக்கு எதி ரானது என்று குறிப்பிட்டது. இதேபோல நோயாளிகள் கேட் கிறார்கள் என்பதற்காக மருத்துவ ரீதியில் அவசியமற்ற சோதனை, சிகிச்சைகளை மருத்துவர்கள் மேற்கொள்ளகூடாது.