ஷுன்ஃபூ அடுக்குமாடி கார்பேட் டையில் கார் ஒன்று தீப்பற்றி எரிந்து கருகியது. இதில் புகை யால் பாதிக்கப்பட்ட ஆடவர் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஷுன்ஃபூ ரோடு 320வது கார் பேட்டையின் 3வது மாடியில் உள்ள ஒரு கார் தீப்பற்றி எரிவதாக குடிமைத் தற்காப்புப் படைக்கு நேற்றுக் காலை 11.50 மணிக்கு தகவல் வந்தது. இதையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பாளர்கள் காரின் இயந்திரப் பகுதியில் மூண்ட தீயை அணைக்கும் முயற் சியில் ஈடுபட்டனர். இந்நிலையில் புகையால் பாதிக்கப்பட்ட 40 வயது ஆடவர் ஒருவர் சுயநினைவுடன் மீட்கப்பட்டு டான் டோக் செங் மருத்து வமனையில் சேர்க்கப் பட்டதாக குடிமை தற்காப்புப் படை யின் பேச்சாளர் ஒருவர் தெரிவித் தார். ஆனால் அவர் காரில் பயணம் செய்தவரா அல்லது வழிப் போக்கரா என்பது தெரியவில் லை.
கார் திடீரென தீப்பிடித்து தீப்பிழம்புகள் சிதறியதில் அங்கிருந்த பெண் ஒருவர் தப்பியோடியதாக சம்பவத்தை நேரில் பார்த்த 71 வயது லு பாய்ஸியாங் கூறினார். ஆனால் அந்தப் பெண்ணுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. படம்: லியான்ஹ சாவ்பாவ்

