தொடக்கநிலை 1ஆம் வகுப்புக்கான பதிவு: கணினி வழி குலுக்கல்

தொடக்கநிலை 1ஆம் வகுப்புக்கான பதிவு: கணினி வழி குலுக்கல்

1 mins read
33987cd9-6085-48ca-9a00-45dfcd3f7f9d
-

தொடக்கநிலை 1ஆம் வகுப்புக் கான பதிவு செய்யும் முறையில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. பள்ளிகளில் எஞ்சியிருக்கும் இடங்களைவிட விண்ணப்பம் செய்தோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் இடம் பெறுபவர்களை நிர்ணயிக்க குலுக்கல் முறை நடத்தப்படும். குலுக்கல் முறையை நேரில் கண்டு தங்கள் பிள்ளைகளுக்குப் பள்ளியில் இடம் கிடைக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள பெற் றோர் அந்தந்த பள்ளிகளுக்குச் செல்லவேண்டி இருந்தது. ஆனால் இந்த நிலை இவ்வாண்டில் மாறுகிறது.

இந்த ஆண்டிலிருந்து கணினி வழி குலுக்கல் முறை அறிமுகமாகிறது. இந்தத் தகவலைக் கல்வி அமைச்சு நேற்று வெளியிட்டது. புதிய அணுகுமுறை தொடக்க நிலை 1ஆம் வகுப்புக்கான பதிவு செய்யும் முறையை எளிதாக்கும் என்றும் பெற்றோருக்கு சௌகரிய மாக இருக்கும் என்றும் அமைச்சு கூறியது. "விண்ணப்பம் செய்யும் அனைவருக்கும் ஒரே அளவி லான வாய்ப்பு இருப்பதை கணினி வழி குலுக்கல் முறை உறுதி செய்யும்," என்று அமைச்சு குறிப்பிட்டது. பதிவு செய்யும் முறை 1, 2A, 2A(2), 2B, 2C, 2C (துணைப் பிரிவு) ஆகிய கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு பிரிவின்கீழ் பதிவு செய்வதற்கான காலகட்டம் முடிவுறும்போது பள்ளிகளில் எவ்வளவு இடங்கள் எஞ்சி உள்ளன என்பதை கல்வி அமைச்சின் இணையத்தளம் மூலம் பெற்றோர் அறிந்து கொள் ளலாம். ST PHOTO: ONG WEE JIN