மெக்காவில் சிங்கப்பூர் யாத்திரிகர் மரணம்

மெக்காவில் சிங்கப்பூர் யாத்திரிகர் மரணம்

1 mins read
5f144258-43e3-42e5-9243-607df6163793
-

உம்ரா புனித யாத்திரைக்குச் சென்றிருந்த சிங்கப்பூரர் ஒருவர் பேருந்து விபத்தில் உயிரிழந்தார். சவூதி அரேபியாவின் மெக்கா நகரில் நடந்த இவ்விபத்தில் பலர் காயமடைந்தனர். மொத்தம் 31 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து மார்ச் 20ஆம் தேதி அதிகாலையில் (சிங்கப்பூர் நேரப்படி பிற்பகல் 1 மணிக்கும் 1.30 மணிக்கும் இடையில்) மெக்காவில் விபத்தில் சிக்கியதாக சிங்கப்பூர் இஸ்லா மியச் சமய மன்றம் (முயிஸ்) தெரிவித்தது. பயணிகளில் பெரும் பாலானோர் சிங்கப்பூரர்கள் என நம்பப்படுகிறது.

உள்ளூரிலுள்ள அபுபக்கர் பயணச் சேவை நிறுவனத்தின் ஏற்பாட்டில் மெக்காவுக்குச் சென்ற யாத்திரிகர்கள் பேருந்தில் பயணம் செய்ததாக முயிஸின் அறிக்கை தெரிவித்தது. அவர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்க அவர்களது உறவினர்களுடன் தொடர்பு கொண்டு வருவதாகவும் முயிஸ் தெரிவித்தது. "இதுவரை, ஒரு சிங்கப்பூரர் கொல்லப்பட்டதோடு, பயணிகள் பலர் காயமடைந்ததாக முயிசுக்குத் தெரிய வந்துள்ளது.

காயமடைந்தவர்கள் மருத்துவக் கவனிப்புக்காக மெக்காவிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப் பட்டுள்ளனர்," என அறிக்கைக் கூறியது.

விபத்தில் நொறுங்கிய பேருந்துகள். படம்: பெரித்தா ஹரியான் வாசகர்