போலிசாருடன் மல்லுக்கட்டு: 50 வயது ஆடவர் கைது

போலிசாருடன் மல்லுக்கட்டு: 50 வயது ஆடவர் கைது

1 mins read
e1071ab7-474c-440e-9ad1-87ab245b1fe8
-

ஜூரோங் வெஸ்ட் வட்டாரத்தில் உள்ள ஒரு வீட்டில் போலிசாருடன் மல்லுக்கட்டிய 50 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த ஆடவர் தமது குடும்ப உறுப்பினர்கள் இருவரை தம்முடன் வீட்டில் வலுக்கட்டாய மாகப் பூட்டி வைத்துக்கொண்ட தாக போலிசார் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தனர். சம்பவ இடத்தை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள் அடைந்தபோது அங்கு 40லிருந்து 50 வரையிலான போலிஸ் அதிகாரிகளும் சிங்கப்பூர் குடி மைத் தற்காப்புப் படை அதிகாரி களும் இருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக அந்த ஆடவர் இருந்த புளோக்குக்குக் கீழ் பாதுகாப்பு மிதவை ஒன்று வைக்கப்பட்டது.

ஒருவேளை அவர் சன்னல் வழியாகக் கீழே குதித்தால் அவரது உயிருக்கு எவ்வித ஆபத்தும் நேர்ந்திடாதபடி இந்த முயற்சி எடுக்கப்பட்டது. இந்த மல்லுக்கட்டுச் சம்பவம் நேற்று நண்பகல் நேரத்தில் தொடங் கியதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். மாலை 5.45 மணி அளவில் வீட்டில் பூட்டி வைக்கப்பட்ட குடும்ப உறுப்பினர் களில் ஒருவர் விடுவிக்கப்பட்டார். பிற்பகல் 1 மணியிலிருந்து மத்திய போதைப்பொருள் ஒழிப் புப் பிரிவுடன் இணைந்து அந்த புளோக்கில் கூட்டு நடவடிக்கை ஈடுபட்டுக்கொண்டிருந்ததாக போலிசார் கூறினர்.

ஆடவரைக் கைது செய்த அதிகாரிகள். படம்: சிங்கப்பூர் போலிஸ் படை ஃபேஸ்புக் பக்கம்