கல்வி அமைச்சர் (பள்ளிகள்) இங் சீ மெங், என்டியுசி துணைத் தலைமைச் செயலாளராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவையில் இடம்பெற உள்ள மாற்றங்களின் ஒரு பகுதியாக இந்த நியமனம் எதிர்பார்க்கப்படுவதாக சாவ் பாவ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. பெயர் குறிப்பிடப்படாத தகவல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி திரு இங், துணைத் தலைமைச் செயலாளராக நியமிக்கப்படுவார் என்றும் இப்போதைய தொழிலாளர் இயக்கத் தலைவர் சான் சுங் சிங்கிற்குப் பதிலாக பிரதமர் அலுவலக அமைச்சராக வும் அவர் நியமிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக அது தெரிவித்தது.
இது பற்றி கேட்டபோது "மாற்றங்கள் இடம்பெறும்போது தேவையான அறிவிப்புகளை நாங்கள் விடுப்போம்," என்று என்டியுசி கூறியதாக சேனஸ் நியூஸ் ஏஷியா குறிப்பிட்டது. அமைச்சரவையில் இடம்பெற இருக்கும் மாற்றங்கள் இளம் அமைச்சர்களுக்கு அதிக பொறுப்புகளையும் அனுபவத்தை யும் வழங்குவதாக இருக்கும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.
அமைச்சர் இங் சீ மெங். படம்: gov.sg/youtube

