பயங்கரவாத சம்பவங்களின்போது படம், காணொளி எடுக்கக்கூடாது

பயங்கரவாத சம்பவங்களின்போது படம், காணொளி எடுக்கக்கூடாது

1 mins read
118a4d3f-41b0-430b-9481-9d3a114a9734
-

சிங்கப்பூரில் பயங்கரவாதத் தாக்குதல் போன்ற மோசமான சம்பவங்கள் நிகழும் போது அதிகாரிகள் விரைவாகவும் நீக்குப் போக்குடனும் செயல்பட ஏதுவாக அவர் களுக்கு அதிகாரங்களை விரிவுபடுத்தும் ஒரு புதிய சட்டம் நேற்று நாடாளுமன்றத்தில் மூன்று மணி நேர விவாதத்திற்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது. பொது ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் என்ற புதிய சட்டம் அத்தகைய அதிகாரங்களை அதி காரிகளுக்கு உள்துறை அமைச்சர் வழங்க அனுமதிக்கிறது.

நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் கவலைகளுக்குப் பதிலளித்து பேசிய இரண்டாவது உள்துறை அமைச்சர் ஜோசஃபின் டியோ, அத்தகைய ஒரு சம்பவத்திற்குப் பிறகு தங்கள் காரியங் களுக்கு அதிகாரிகளே பொறுப்பு ஏற்பார் கள் என்று விளக்கம் அளித்தார். அமைச்சர் டியோ இந்தச் சட்டத்திற்கான மசோதாவை நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றினார்.

பயங்கரவாதத் தாக்குதல் போன்ற படு மோசமான சம்பவங்கள் நிகழும் இடங் களில் உள்ளவர்கள், அந்த இடத்தைப் படம் எடுப்பது, காணொளிப் படம் எடுப்பது அவற்றைப் பகிர்ந்துகொள்வது, பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி குறுஞ்செய்தி அல் லது ஒலிவழி தகவல்களைப் பரப்புவது ஆகியவற்றைப் புதிய சட்டம் தடுக்கிறது. அத்தகைய படுமோசமான சம்பவங் களின்போது அங்கீகரிக்கப்படாத தகவல் தொடர்புகள் காரணமாகப் பாதுகாப்பு நட வடிக்கைகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு களைக் குறைப்பது இந்தச் சட்டத்தின் நோக்கம்.

உள்துறை இரண்டாம் அமைச்சர் ஜோசஃபின் டியோ