புதிய நிதியால் இலவச சட்ட சேவை பெறுவோர் பலனடைவர்

புதிய நிதியால் இலவச சட்ட சேவை பெறுவோர் பலனடைவர்

1 mins read
c4c56b95-046e-4985-9795-85b870b7c355
-

சட்டக் கழகத்ததால் நிர்வகிக்கப் பட இருக்கும் புதிய நிதி என் பது வருவாய்க்கான கூடுதல் வழி அல்ல என்றும் கட்டணமற்ற சேவைகளுக்கு நிதியளிப்பதை நோக்கமாகக் கொண்டது என்றும் மூத்த சட்ட துணை அமைச்சர் இந்திராணி ராஜா (படம்) நாடாளுமன்றத்தில் தெரி வித்தார். சட்டத்துறை நிபுணர் சட்டத்தில் மாற்றங்கள் செய்யப் படும் நிலையில் அவர் இவ்வாறு விளக்கி உள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதி லளித்த குமாரி இந்திராணி, கோரப்படாத பண நிதி (யுஎம் ஃபண்ட்) எவ்வாறு பயன்படுத்தப் படவேண்டும் என்பதை துணைச் சட்டம் விவரிக்கும் என்றார். அதற்கு அமைச்சர் ஒப்புதல் வழங்குவது அவசியம் என்றும் அவர் சொன்னார். "புதிய 'யுஎம் ஃபண்ட்' மூலம் பயனடைவோர் பொது மக்கள் என்பதையும் சட்டக் கழ கத்தின் இலவசச் சேவைகளைப் பெறுவதற்கான அவசியத்தையும் தகுதியையும் பெற்றவர்கள் அவர் கள் என்பதையும் சொல்வது நியா யமாக இருக்கும்," என்றார் அவர்.