அராப் ஸ்திரீட், கம்போங் கிளாம் ஆகிய வரலாற்றுச் சின்னங்களை நினைவுகூரும் வண்ணம் சிங்கப்பூர் போஸ்ட் நேற்று புதிய அஞ்சல் தலைகளை வெளியிட்டது. அந்தப் புதிய அஞ்சல் தலைகள் அராப் ஸ்திரீட்டின் முந்திய, தற்போதைய கடைவீடுகளையும் கம்போங் கிளாமில் உள்ள சுல்தான் பள்ளிவாசலையும் சித்திரிக்கின்றன. ஃபர்ஸ்ட் லோக்கல், $1.30 என்னும் இரு விலைகளில் அந்த அஞ்சல் தலைகள் கிடைக்கும். அனைத்து அஞ்சலகங்களிலும் சிங்போஸ்ட் இணையத்தளம் வாயிலாகவும் புதிய அஞ்சல் தலைகளை வாங்கிக்கொள்ளலாம்.
புதிய அஞ்சல் தலைகள். படம்: சிங்போஸ்ட்

