சிங்கப்பூரின் சட்ட நடைமுறை மீதும் சட்ட ஆளுமை மீதும் சிங்கப்பூரர்களுக்கு இருக்கும் உயரிய நம்பிக்கை ‚'கல்லில் பதிக்கப்பட்டதல்ல' என சட்ட, உள்துறை அமைச்சர் திரு கா.சண்முகம் நேற்று கூறினார். "நாம் கவனமாக இல்லாவிட் டால், பிரிட்டிஷ் நீதித்துறை எதிர் நோக்கிய பிரச்சினைகள் சிங்கப் பூரிலும் எழக்கூடும்," என அவர் எச்சரித்தார். பிரிட்டனில் நீதி பதிகள் சாடப்படுவதோடு, அவர் கள் மீதான அவநம்பிக்கையும் பரவி வருகிறது. "நாம் சில வழிகளில் (பிரிட்டனி லிருந்து) மாறுபட்ட பாதையைத் தேர்ந்தெடுத்திருப்பதே அப்படி நடக்காததற்கான காரணம்," என்று நாடாளுமன்றக் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
பிரிட்டனில் நீதிபதிகளை வேலைக்குச் சேர்ப்பதில் ஏற்பட்டு உள்ள நெருக்கடிநிலை பற்றிய செய்தியைச் சுட்டிக்காட்டிய ஹாலந்து=-புக்கிட் தீமா குழுத் தொகுதி உறுப்பினர் திரு கிறிஸ் தஃபர் டி சூசா இங்குள்ள நிலவரம் பற்றி கேட்டார். ‚'த டைம்ஸ்' செய்தித்தாளில் மார்ச் 5ம் தேதி வெளிவந்த அச் செய்தி, ‚நீதிபதிகள் மதிக்கப்படுவ தில்லை என்ற கண்ணோட்டமே பிரச்சினைக்கான காரணம் எனக் குறிப்பிட்டது. நீதிபதிகளின் ஓய் வூதிய ஏற்பாடுகள் குறித்து நீதித் துறைக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் கருத்து வேறுபாடு நிலவுவதாகவும் செய்தி குறிப்பிட் டது. நீதித்துறைக்குப் போதிய வளங்கள் கொடுக்கப்படாததும், பொதுமக்களும் பிரிட்டிஷ் ஊடக மும் நியாயமற்ற முறையில் நீதித்து றையைச் சாடி வருவதும் பிரிட்ட னின் நிலைமைக்குக் காரணமென நம்புவதாகத் திரு சண்முகம் கூறி னார்.
சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம். கோப்புப் படம்

