சிங்கப்பூரில் சென்ற ஆண்டு மறு ஆய்வு செய்யப்பட்ட பொதுப் போக்குவரத்துக் கட்டண ஏற்பாட் டில் ஒரு புதிய அங்கம் சேர்க் கப்படவுள்ளது. கட்டமைப்பு ஆற்றல் கூறு எனும் அந்த அங்கம் பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பின் விரிவாக்கத்தையும் அதில் மேற் கொள்ளப்படும் பயணங்களின் எண்ணிக்கையையும் கருத்தில் கொள்ளும் என்றும் பொதுப் போக்குவரத்து மன்றம் நேற்று அறிவித்தது. பேருந்து, ரயில் கட்டமைப்புகள் இரண்டிலும் போக்குவரத்துக் கட்டமைப்பு விரிவாக்கம், அதன் பயன்பாடு ஆகியவை சரிசமமான முக்கியத்துவத்தைக் கட்டமைப் புக்கு வழங்கும் என்று மன்றம் தெரிவித்துள்ளது. புதிதாகச் சேர்க்கப்படும் கட்ட மைப்பு, பயன்பாடு இரண்டையும் கட்டமைப்பு ஆற்றல் கூறு ஒப்பு நோக்கும். அதாவது பயணங்களைவிட கட்டமைப்பு ஆற்றல் அதிகரிக்கும் பட்சத்தில் கட்டமைப்பு ஆற்றல் கூறு அதிகரிக்கும். இதன்மூலம் கட்டண வரம்பு உயரும் என்று மன்றம் விளக்கியது.
பொதுப் போக்குவரத்து ஆற் றல் அதிகரிக்கப்படுவதால் நடை முறைச் செலவு அதிகமாகிறது. ஆகையால் இந்தப் புதிய அங்கம் தேவைப்படுவதாக மன்றம் தெரி வித்தது. 2012 முதல் 2016 வரை வருடாந்திர நடைமுறைச் செலவு $900 மில்லியனையும் தாண்டி விட்டது. அதே காலகட்டத்தில் கட்டண வருமான உயர்வு $230 மில்லியன் மட்டுமே என்று மன்றம் சுட்டிக்காட்டியது. அரசாங்க மானியங்கள் மூலம் இந்தப் பற்றாக்குறை சமாளிக்கப் படுகிறது என்றாலும் செலவுக் கும் வருவாய்க்கும் இடையிலான இடைவெளி அதிகமாவதை நீண்டகாலத்திற்குச் சமாளிக்க முடியாது என்று மன்றம் தெரிவித்தது.

