சிங்கப்பூரை தளமாகக்கொண்டு செயல்படும் எல்லா தொழில்துறை களையும் சேர்ந்த மொத்தம் 300 நிறுவனங்கள், நான்காவது தொழில் புரட்சிக்கு ஆயத்தமாக இருப்பதை மதிப்பிடுவதற்கு இல வச உதவி கிடைக்க உள்ளது. அதிநவீன உற்பத்தித்துறை உத்திகளை நிறுவனங்கள் கைகொள்வதற்கு அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இது இடம்பெறுகிறது.
உற்பத்தித் துறையினர் எதிர் காலத்தில் அறிவார்ந்த தொழிற் சாலைகளை உருவாக்குவதற்கு உதவுவதும் இதன் நோக்கம். இந்த இலவச மதிப்பீட்டிற்கு சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சிக் கழகம் நிதி வழங்கும் என்று வர்த்தக தொழில் மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் நேற்று அறிவித்தார்.
அவர், 6,000 தொழில்துறை பேராளர்கள் கலந்துகொண்ட ஒரு மாநாட்டில் உரையாற்றினார். எல்லா தொழில்துறைகளையும் சேர்ந்த நிறுவனங்கள், இப்போது எந்த அளவிலான ஆற்றல் வளத் துடன் இருக்கின்றன என்பதை மதிப்பிடுவதற்காக உருவாக்கப் பட்ட ஓர் அட்டவணைக்கு 'சிங்கப்பூர் அறிவார்ந்த தொழில் துறை ஆயத்தநிலை அட்டவணை' என்று பெயர்.

