'எஸ்யுடிடி' பட்டதாரிகளுக்கு விரைவில் வேலை, அதிக தொடக்க சம்பளம்

'எஸ்யுடிடி' பட்டதாரிகளுக்கு விரைவில் வேலை, அதிக தொடக்க சம்பளம்

1 mins read
64602deb-efb1-4039-89d1-79c8dfc07c20
-

சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவ மைப்பு பல்கலைக்கழகத்தை (எஸ்யுடிடி) சேர்ந்த மூன்றாவது அணி பட்டதாரிகள், இதர மூன்று தன்னாட்சி உள்ளூர் பல்கலைக் கழகப் பட்டதாரிகளைவிட அதிக தொடக்க சம்பளம் கிடைக்கும் வேலைகளைப் பெற்று இருக்கி றார்கள். அந்தப் பட்டதாரிகள் முந்தைய ஆண்டு பட்டதாரிகள் பெற்றதை விட அதிகம் சம்பாதித்தார்கள். இந்த விவரங்களைத் தொழில் நுட்ப மற்றும் வடிவமைப்பு பல் கலைக்கழகம் நேற்று தெரிவித்தது. இந்தப் பல்கலைக்கழகத்தின் மூன்றாவது பட்டதாரிகள் அணி யில் உள்ள 267 பேரில் 228 பேரை உள்ளடக்கி ஓர் ஆய்வு நடத்தப் பட்டது.

முழுநேர நிரந்தர வேலைகளில் சேர்ந்த இந்தப் பல்கலைக்கழக பட்டதாரிகளின் சராசரி மொத்த மாத வருமானம் 2017ல் $3,700 ஆக இருந்தது. 2016ல் இந்தச் சம்பளம் $3,650. இந்த ஊதியம் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழ கம் ஆகியவற்றின் பட்டதாரிகள் பெற்ற $3,400 என்ற சராசரி தொடக்க சம்பளத்தைவிட அதி கம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பல்கலைக்கழகங் களைச் சேர்ந்த பட்டதாரிகளின் மொத்த எண்ணிக்கை சுமார் 10,000 ஆகும்.