கொள்கைகளை மீறியது குறித்து பயனாளர்களிடம் முன்கூட்டியே தெரிவித்திருக்கவேண்டும் என்று சமூக ஊடகமான ஃபேஸ்புக் ஒப்புக்கொண்டுள்ளது. இணையம் வழியாக வேண்டு மென்றே பொய்த் தகவல்களைப் பரப்புவது தொடர்பான சிங்கப்பூர் தெரிவுக்குழு முன் நேற்று முன்னிலையாகி விளக்கமளித்த போது இதனை ஒப்புக்கொண்டார் ஃபேஸ்புக் நிறுவனத்தின் பொதுக் கொள்கைக்கான ஆசிய பசிபிக் துணைத் தலைவர் சைமன் மில்னர்.
அரசியல் தகவல் ஆய்வு நிறுவனமான கேம்பிரிட்ஜ் அன லிட்டிகா, 2016 அமெரிக்க அதிபர் தேர்தலின்போது முறைகேடாக ஃபேஸ்புக் தகவல்களைப் பயன் படுத்தியதாக எழுந்த புகார் தொடர்பில் சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்தபோது, 2014 மற்றும் 2015ஆம் ஆண்டு களுக்கு இடையே பயனாளர் களின் தகவல்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டது குறித்து முன்னரே அவர்களிடம் தெரி வித்திருக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு ஃபேஸ்புக்கிற்கு உள்ளது என்று திரு மில்னர் ஒப்புக் கொண்டார்.
ஃபேஸ்புக் நிறுவனத்தின் பொதுக் கொள்கைக்கான ஆசிய பசிபிக் துணைத் தலைவர் சைமன் மில்னரை (வலது) கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்தார் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம். படங்கள்: gov.sg

