வரும் 26ஆம் தேதி இம்மாதத்தின் கார்களற்ற ஞாயிறு நாள். அந்நாளில் கலந்துகொள்ளும் மக்கள் பொருட்களை வீசிப் பிடிக்கும் சாகசங்களை அன்று பங்கேற்கும் சர்க்கஸ் படைப்பா ளர்களிடமிருந்து கற்றுக்கொள்ளலாம். இதைத் தவிர, கோனாட் டிரைவில் இடம்பெறும் அடிப்படை சுகாதாரப் பரிசோதனைகளில் பொதுமக்கள் தானியக்க இதய மீட்பு கருவியைப் பயன்படுத்தும் முறையைக் கற்றுக்கொள்ள லாம். பார்வைகுறைபாடுடையோர் சங்கத்தினர் அளிக்கும் தோள் பிடிப்பு சேவையும் உண்டு. நிலப்போக்குவரத்து ஆணையத்தின் புதிய பாதுகாப்பான சைக்கிளோட்ட விதிமுறைகளை சைக்கிளோட்டிகளும் தனி நபர் நடமாட்டக் கருவிகளைப் பயன்படுத்துவோரும் தெரிந்துகொள்ளலாம்.
கார்களற்ற ஞாயிறு நாளில் பங்கேற்கும் சர்க்கஸ் படைப்பாளர்கள்
1 mins read

