கிராஞ்சி கிரசெண்டில் உள்ள ஒரு கிடங்கில் நேற்று அதிகாலை 2.16 மணிக்கு மூண்ட தீயை அணைக்க சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு எட்டு மணி நேரம் பிடித்தது. அதில் 22 தீயணைப்புச் சாதனங்கள், ஆதரவு வாகனங்கள் ஆகியவற்றுடன் 70 தீயணைப்பாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள். வா அண்ட் ஹுவா நிறுவனத்தின் கிடங்கில் மூண்ட தீ நேற்றுக் காலை 10.15 மணிக்கு அணைக்கப்பட்டது.
தீயைக் கட்டுப்படுத்த தனது வீரர்கள் அரும்பாடுபட்டனர் என்றும் அப்போது கிடங்கில் இருந்த 20 ஊழியர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர் என்றும் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. இதற்கிடையே, புலாவ் புசிங் தீயை அணைக்கப் பாடுபட்ட சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் 128 வீரர்களுடன் போலிஸ் படை, கடற்துறை, துறைமுக ஆணையம், சிங்கப்பூர் துறைமுக ஆணையம், சிங்கப்பூர் குடியரசு கடற்படை, தேசிய சுற்றுப்புற வாரியம் ஆகியவற்றை பிரதமர் லீ சியன் லூங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.

