வெளிநாட்டு ஊழியர்களை வீட்டுக்கு அழைத்து விருந்து

1 mins read
4704a15d-35c6-4bab-aa0e-fcde5ab57145
-

இங்கு பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களை தங்களது வீட்டுக்கு அழைத்து சாப்பாடு போடுவதை சிறிய குழு ஒன்று கடந்த நவம்பர் முதல் செய்து வருகிறது. அந்தச் செயலுக்குப் பெயர் 'Come Makan With Me' (என்னோடு சாப்பிட வாருங் கள்) என்பதாகும். வெளிநாட்டு ஊழியர் நிலையத்தின் ஆதர வோடு முகமது ஃபாரிட், 39, என்பவர் இச்செயலை தொடங் கினார். அதுபோன்ற விருந்து ஒன்றில் இங்குள்ளவர்களின் குடும்பங்களோடு வெளிநாட்டு ஊழியர்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் புகைப்படங்களை வெளிநாட்டு ஊழியர் நிலையம் நேற்று தனது ஃபேஸ்புக்கில் பதிவேற்றியது.

பிடோக்கில் உள்ள தமது பெற்றோர் வீட்டில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு விருந்தளிக்கும் முகமது ஃபாரிட் (வலது ஓரம்). படம்: வெளிநாட்டு ஊழியர் நிலையத்தின் ஃபேஸ்புக்