கனரக வாகன ஓட்டுநர்களைக் கண்காணிக்க ரகசியப் படை

1 mins read
fa085c06-e900-4d89-ade8-f2250726ea4d
-

தவறிழைக்கும் கனரக வாகன ஓட்டுநர்களை மோட்டார் சைக்கிள் குழு கண்காணிக்கும். இக்குழு வில் போக்குவரத்து போலிஸ், நிலப் போக்குவரத்து ஆணையம் ஆகியவற்றின் அதிகாரிகள் உள் ளனர். சிங்கப்பூரின் சாலைகளில் ஓடும் வாகனங்களில் கனரக வாகனங்களின் விழுக்காடு வெறும் ஐந்து விழுக்காடு மட் டுமே. ஆனால் கடந்த ஆண்டு நிகழ்ந்த விபத்துகளில் மாண்ட ஒவ்வொரு பத்துப் பேரிலும் மூவர் கனரக வாகனங்களால் உயிரிழந் தவர்கள்.

கனரக வாகன ஓட்டுநர்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக் கும் மோட்டார் சைக்கிள் குழுவில் போக்குவரத்து போலிசின் 12 ரகசிய அதிகாரிகளும் நான்கு நிலப் போக்குவரத்து ஆணைய அதிகாரிகளும் இடம்பெற்றிருப்பர். கறுப்பு நிற உடையில் கறுப்பு நிற மோட்டார் சைக்கிள்களில் செல்வதால் அவர்கள் போலிஸ் அதிகாரிகள் என எளிதில் கண் டறிய இயலாது. இந்த ரகசியப் படை கடந்த 2016ஆம் ஆண்டு முதல் நடவடிக் கையில் ஈடுபட்டு வருகிறது.

கனரக வாகனத்தை மறித்து அதன் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. கோப்புப் படம்: வான் பாவ்