மானபங்கக் குற்றம்: காற்பந்து துணை பயிற்றுநருக்கு சிறை

1 mins read
88453b42-b1c1-4131-8d0f-64e238512f76
-

வயது குறைந்த சிறுமியை மான பங்கம் செய்த குற்றத்திற்காக அல்பிரிக்ஸ் நிகாட்டா சிங்கப்பூர் காற்பந்துக் குழுவின் முன்னாள் துணை பயிற்றுநர் ஒருவருக்கு நேற்று நீதிமன்றத்தில் பத்து நாள் சிறைத் தண்டனை விதிக் கப்பட்டது. ஜப்பான் நாட்டவரான தகாஃ பூமி மிஸுனோ, 30, (படம்) எனப் படும் அந்த ஆடவர் கடந்தாண்டு ஜூலை 6 ஆம் தேதி அச்சிறு மியை இருமுறை மானபங்கம் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட் டது.

14 வயது மட்டுமே ஆனதால் ஆடவரின் மானபங்கத்துக்கு அச்சிறுமி இரையானதாக தண் டனை விதிக்கையில் நீதிபதி குறிப்பிட்டார். மானபங்கம் செய் யும் நோக்கத்துடன் அந்தச் சிறு மியை அவர் சுற்றிச் சுற்றி வந்த தாகவும் அவர் கூறினார். முதலில் அச்சிறுமியை ஜூரோங் ஈஸ்ட் ஸ்ட்திரீட் 31ல் உள்ள கடை ஒன்றில் மிஸுனோ மானபங்கம் செய்தார். பின்னர் அருகிலிருந்த பேரங்காடியில் அச்சிறுமி பொருட்களை வாங்கிக்கொண்டிருந்தபோது தமது வலது பின்புறத்தை யாரோ தொடுவதை உணர்ந்தார்.