அடுத்த மாதம் 15ஆம் தேதியிலிருந்து 11 வாரங்களுக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை யிலும் பயணிகள் புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டியில் பயணம் செய்ய முடியாது. எல்ஆர்டி கட்டமைப்பின் நம்பகத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில் பராமரிப்புப் பணிகள் நடத்தப்பட இருப்பதே இதற்குக் காரணம். இந்தத் தகவலை நேற்றைய செய்தியாளர் கூட்டத்தில் புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி சேவையை நடத்தும் எஸ்எம்ஆர்டி நிறுவனம் வெளியிட்டது.
இந்த 11 ஞாயிற்றுக்கிழமை களில் எல்ஆர்டிக்குப் பதிலாகப் பயணிகள் பயணம் செய்ய 30 துணைப் பேருந்துகள் விடப் படும். பராமரிப்புப் பணிகளின் போது மின் ரயில் தண்டவாளத் தின் சில பகுதிகள் மாற்றப்படும். அதுமட்டுமல்லாது, தண்டவாள விசைப் பகுதிகளும் மாற்றப்படும்.

