பெட்டேன் ரோடு, ஜாலான் புசார் ஆகிய இடங்களில் செயல்பட்ட இரண்டு சட்டவிரோத சூதாட்டக் கூடங்களுக்குள் போலிசார் நுழைந்து அங்குள்ள 27 கணினி கள், $5,469 ரொக்கம் ஆகியவற் றைக் கைப்பற்றி உள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் பெட்டேன் ரோட்டில் தொடங்கிய திடீர் சோதனை நடவடிக்கையில் ஏழு ஆண்கள், மூன்று பெண்கள் சிக்கினர். அவர்கள் 44க்கும் 64 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். ஜாலான் புசார் சூதாட்டக் கூடம் பின்னிரவு 1 மணிக்கு மூடப்படும்போது போலிஸ் நடவ டிக்கை தொடங்கியது. அதில் கூடத்தை நடத்திய 64 வயது ஆடவர் கைதானார்.
சூதாட்டம்: பத்து பேர் கைது
1 mins read