'குவோங் வை ‌ஷூ' மருத்துவமனைமீண்டும் திறப்பு

'குவோங் வை ‌ஷூ' மருத்துவமனைமீண்டும் திறப்பு

1 mins read

முன்பிருந்த பத்து கட்டடங்களில் ஆறை இடித்து, எஞ்சியுள்ள நான்கில் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொண்டதுடன் ஒரு புத்தம் புதிய கட்டடத்துடன் நேற்று மீண் டும் திறக்கப்பட்டது 'குவோங் வை ‌ஷூ' மருத்துவமனை. இப்போது சிங்கப்பூரிலேயே ஆகப் பெரிய ஒற்றை வளாக தாதிமை இல்லமாக உருவெடுத்தி ருக்கும் இம்மருத்துவமனை, $96 மில்லியன் செலவில் ஈராண்டுக ளாக மறுசீரமைப்புப் பணிகளைக் கண்டது.

சீரமைப்புப் பணிகளின்போது அந்த மருத்துவமனை தற்காலிமாக இரண்டு மாடிக் கட்டடத்தில் செயல்பட்டது. மறுசீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு தனது புதிய வளாகத்தில் அம்மருத்துவமனை தனது முதலா வது சமூக நிகழ்ச்சியான சமூகப் பராமரிப்பு தினத்தை நேற்று நடத் தியது. சிராங்கூன் ரோட்டில் உள்ள புதிய வளாகத்தில் 12 மாடிக் கட்ட டத்தில் 600 படுக்கைகள், ஒரு முதியோர் பராமரிப்பு நிலையம், ஒரு பாரம்பரிய சீன மருந்து நிலை யம், சிங்கப்பூர் சீன மருத்துவப் பயிலகம், ஒரு மரபுடைமைக் காட் சிக்கூடம் ஆகியவை உள்ளன.

காலாங்-வாம்போ வட்டாரத்தில் முதியோருக்காகவும் சமூகத்தின ருக்காவும் சேவையாற்றும் ஓர் ஒருங்கிணைந்த மையமாக செய லாற்ற நோக்கம் கொண்டுள்ள 'குவோங் வை ‌ஷூ' மருத்துவ மனை, அந்த வளாகத்தில் கட்டங் கட்டமாக மேலும் பல வசதிகளை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள் ளது.